ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து ஒரு பெண் குதிரையின் உதவியால் உயிர் தப்பி உள்ளார்.
அந்நாட்டின் மோருயா நகரையும் காட்டுத் தீ விட்டு வைக்கவில்லை. ஊரை சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கு வசித்த பீசி விண்டர் என்ற பெண், தனது 11 வயது மகனை, உறவினருடன் காரில் ஏற்றி அருகில் உள்ள மற்றொரு ஊருக்கு அனுப்பி வைத்தார். வீட்டில் உள்ள முக்கிய பொருட்களை எல்லாம் காரில் ஏற்றியதால் அதில் இடமில்லாத காரணத்தால், விண்டர், தனது குதிரையில் ஏறி காரை பின்தொடர்ந்தார்.
அவர்கள் சென்ற வழியிலும் காட்டுத் தீ பற்றி எரிந்த நிலையில், வேறு வழியின்றி தீக்குள் புகுந்து தப்பிய சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குதிரை தீக்கு அஞ்சாமல் தொடர்ந்து பயணித்த தால் உயிர் தப்பியதாக அவர் கூறியுள்ளார்.