மகாராஷ்டிரா அமைச்சரவையிலிருந்து, சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தார் ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவை கடந்த 30ஆம் தேதி பதவியேற்றது. அப்போது, சிவசேனாவைச் சேர்ந்த அப்துல் சத்தார் என்பவர், இணையமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்ட கவுன்சில் தேர்தலில், காங்கிரசை ஆதரிப்பதாக சிவசேனா முடிவெடுத்தது. தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடத்தில், காங்கிரசை முன்னிறுத்தும் சிவசேனாவின் முடிவில், அப்துல் சத்தார் அதிப்ருதி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை அக்கட்சியின் முன்னாள் எம்பி சந்திரகாந்தும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து, விலகியிருக்க, அப்துல் சத்தார் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.