தெலங்கானா மாநிலத்தில் வெளியிடப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமியை அதிகாரிகள் சேர்த்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதில் கரிம்நகர் மாவட்டம் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான 3 வயது சிறுமி நந்திதாவின் பெயர், புகைப்படம் இருந்துள்ளது. அதில் நந்திதா 35 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.