​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத்திற்காக பரஸ்பரம் சந்தைகளை அணுகுவது எளிதாகும்

Published : Jan 04, 2020 4:19 PM

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத்திற்காக பரஸ்பரம் சந்தைகளை அணுகுவது எளிதாகும்

Jan 04, 2020 4:19 PM

இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடுகளை எட்டும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பரில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அத்தகைய விரிவான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னோட்டமாக, இரு நாடுகளிடையே வர்த்தக உடன்பாடுகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன.

அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பொறுப்பில் இருந்து விடைபெற உள்ள ஹர்ஷவர்தன் சிறிங்கலா இதைத் தெரிவித்துள்ளார். இந்த வர்த்தக உடன்பாடுகள் மூலம் இந்திய, அமெரிக்க சந்தைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் அணுகுவது எளிதாகும் என ஹர்ஷவர்தன் சிறிங்கலா கூறியுள்ளார்.