சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதலமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு
Published : Jan 04, 2020 3:50 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெகன் மோகன் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, “குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான் என்றும் வருகிற 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் கட்டாயம் ஆஜராக வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.