​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில்

Published : Jan 04, 2020 3:36 PM

மக்கள் தொகை பதிவேடு பணியில் ஈடுபடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில்

Jan 04, 2020 3:36 PM

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட மறுத்தால் அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் அபராதம் வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அப்பணியில் ஈடுபடமாட்டோம் என மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஆனால் 2003-ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் படி தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்றும், அப்பணியில் ஈடுபட மறுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.