​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

Published : Jan 04, 2020 3:13 PM

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

Jan 04, 2020 3:13 PM

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில்,  நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.