இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என இம்ரான்கான் போலி வீடியோ பதிவு - ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம்
Published : Jan 04, 2020 2:40 PM
இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என இம்ரான்கான் போலி வீடியோ பதிவு - ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம்
Jan 04, 2020 2:40 PM
இந்தியாவில் நடைபெறும் அத்துமீறல் என போலி வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஐ.நாவுக்கான இந்திய தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய போலீஸ் நடத்தும் அத்துமீறல்கள் என பதிவிட்டிருந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் என அவர் பகிர்ந்திருந்த வீடியோ, 7 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ பதிவாகும். இப்படி போலி வீடியோவை பதிவு செய்ததற்கு கண்டனங்கள் எழுந்தவுடன், அந்த ட்விட்டர் பதிவை இம்ரான்கான் நீக்கிவிட்டார்.
இதேபோல, முன்னர் ஒருமுறை பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீர் பெண் என பாலஸ்தீன பெண்ணின் புகைப்படத்தை ஐ.நா. சபையில் பாகிஸ்தான் காட்டியது.
இவற்றை எல்லாம் குறிப்பிடும் வகையில், தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன், "தொடர்ந்து அத்துமீறுபவர்கள்" என பாகிஸ்தானை சாடியுள்ளார்.