ஆஸ்திரேலியாவில் புதர்தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்பார்வையிடும் வகையில் இந்தியாவில் இம்மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஒத்திவைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும், ஜப்பானிலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த மாதம் மத்தியில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். இந்நிலையில், புதர் தீயை கட்டுப்படுத்தும் பணியையும், தீ பரவும் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியையும் மேற்பார்வையிடும் வகையில் இந்தியா, ஜப்பான் பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக கான்பெராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயண ஒத்திவைப்பு முடிவு குறித்து கூறிவிட்டதாகவும் மோரிசன் குறிப்பிட்டார்.