ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக வளர்பிறை என்பதையே காட்டுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அதிமுகவின் வாக்குசதவீதம் தற்போது அதிகரித்திருப்பதாகவும், இது அதிமுகவுக்கு மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. அரசியல் தலையீடு இல்லாமல் கடமையை செய்ததால் தான் தேத்தல் முடிவுகள் இந்த அளவிற்கு வந்துள்ளது. அதிமுக ஏறுமுகத்திலும், திமுக இறங்கு முகத்திலும் உள்ளது. இது தான் உண்மை.
ஆ னால் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளதை போன்று பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள். உண்மையில் திமுக அதள பாதளத்திற்கு தான் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அதிமுகவை முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா விமர்சித்திருப்பது குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு ஜெயக்குமார், கட்சியில் இருந்துகொண்டு கட்சியை விமர்சிக்க கூடாதென்றும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பதிலளித்தார்.