வடமாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக, வடக்கு ரயில்வே பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 19 ரயில்கள் தாமதமாகியுள்ளன.
கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. எதிரே 200 மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், 19 ரயில்கள் பல மணி நேரம் தாமதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோட்டா, குவாலியர், ஜான்சி, கயா உள்ளிட்ட பகுதிகளில் 50 மீட்டருக்குள் வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியது.