2019-ம் ஆண்டில் இந்தியாவிற்கு அதிகம் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Published : Jan 04, 2020 8:15 AM
வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 விழுக்காட்டும் அதிகம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில் (டி.டி.சி.ஐ) இந்தியாவின் தரவரிசை 2013 இல் 65 ஆக இருந்து. 2019ல் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2019-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து 96 லட்சத்து 69 ஆயிரத்து 633 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய 2018-ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 3 புள்ளி 23 விழுக்காடு அதிகமாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே காலகட்டத்தில் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் ஈட்டிய அந்நியச் செலாவணி வருவாய் ஒரு கோடியே 75 லட்சத்து 407 ரூபாயில் இருந்து 7 புள்ளி 4 விழுக்காடு அதிகரித்து, ஒரு கோடியே 88 லட்சத்து 364 ரூபாயாக இருந்தது என அந்த அறிக்கையில் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இ-விசா மீதான விசா கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாவை உயர்த்துவதற்கான மற்றொரு கட்டமாக, ஓட்டல் அறைகள் மீதான ஜிஎஸ்டியை ஒரு இரவுக்கு ரூ.1,001 முதல் ரூ .7,500 வரை 12 சதவீதமாகவும், ரூ .7,501 மேல் உள்ள கட்டான வசூலுக்கு 18 சதவீதமாகவும் அரசு குறைத்துள்ளது.