சைரஸ் மிஸ்திரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு
Published : Jan 04, 2020 7:38 AM
சைரஸ் மிஸ்திரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனு
Jan 04, 2020 7:38 AM
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டது முற்றிலும் தொழில் திறனின் அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், டாடா சன்ஸில், ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் 18 புள்ளி 4 சதவீத பங்குகளை வைத்துள்ளதால் அதன் பிரதிநிதி என்ற அடிப்படையில் மிஸ்திரி நியமனம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட குழுமத்திலிருந்து ஒருவர் உரிமை கொண்டாடும் விதமாக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீப்பாயம் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், எனவே அதனை ரத்து செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.