அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனிநல வாரியம் -புதுச்சேரி முதலமைச்சர்
Published : Jan 04, 2020 7:08 AM
புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்நடை பெருக்கத்தை அதிகரிக்க கால்நடை வளர்ப்பு அமைப்பு ஒன்று உருவாக்க குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.