​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறந்த மீனின் வயிற்றுக்குள் உயிருடன் இருந்த மற்றொரு மீன்

Published : Jan 04, 2020 7:04 AM

இறந்த மீனின் வயிற்றுக்குள் உயிருடன் இருந்த மற்றொரு மீன்

Jan 04, 2020 7:04 AM

அமெரிக்காவில் இறந்து பலமணி நேரம் ஆன மீனின் வயிற்றில் இருந்து மற்றொரு மீன் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தில் ஓடும் மிஸிஸிப்பி ஆற்றில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வெகுநேரம் கழித்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பி மீன்களைப் பங்கிட்டுகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மீனின் வயிற்றில் அசைவு இருந்ததைக் கண்ட மீனவர்கள், குறிப்பிட்ட மீனின் வயிற்றைக் கிழித்துப் பார்க்கையில் அதனுள் மற்றொரு மீன் அசைவற்று கிடந்தது.

பின்னர் அதனை தட்டியபோது வயிற்றிலிருந்து வந்த அந்த மீன் துள்ளிக் குதித்ததைக் கண்டு மீனவர்கள் உற்சாகமடைந்தனர். இறந்து பலமணி நேரம் ஆன மீனின் வயிற்றுக்குள் இருந்த மற்றொரு மீன் உயிருடன் இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.