அமெரிக்கா, தைவான் போர் ஒத்திகை எதிரொலி...எதிர்ப்பு தெரிவித்த சீனா
Published : Jan 04, 2020 6:57 AM
அமெரிக்கா, தைவான் இடையே போர்ப் பயிற்சி ஒத்திகை நடந்து வரும் நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது
தென் சீனக் கடல் பகுதியில் தைவானும், அமெரிக்காவும் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட கடல் பகுதியை உரிமம் கொண்டாடி வரும் சீனா நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து போர் விமானம் புறப்பட்டுச் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஃபிளையிங் ஷார்க் எனப்படும் ஜே 15 என்ற அதிநவீன விமானத்தை புதிய கப்பலில் இயக்கி தனது வலிமையை பறைசாற்றி உள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வீடியோ அமெரிக்கா மற்றும் தைவானை எச்சரிக்கும் வகையில் இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.