​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முஸ்லீம்கள் போலீசாரால் தாக்கப்படும் 3 வீடியோக்களை நீக்கினார் இம்ரான்கான்

Published : Jan 04, 2020 6:53 AM

முஸ்லீம்கள் போலீசாரால் தாக்கப்படும் 3 வீடியோக்களை நீக்கினார் இம்ரான்கான்

Jan 04, 2020 6:53 AM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது டிவிட்டர் பகுதியில் பதிவிட்ட மூன்று வீடியோக்களையும் அவை தொடர்பான பதிவுகளையும் நீக்கி விட்டார்.

இம்ரான் கான் "உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய காவல்துறையின் படுகொலை" என்ற தலைப்பில் சில வீ டியோக்களை பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோக்களில் முஸ்லீம்கள் மீது உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தாக்குதல் நடத்திய காட்சிகள் இருப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த வீடியோக்கள் போலியானவை என்று உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்தனர். வங்க தேசத்தில் முன்பு நடைபெற்ற ஒரு போலீஸ் தடியடி சம்பவத்தைத் தான் உத்தரப்பிரதேச வீடியோவாக இம்ரான் கான் பதிவிட்டிருந்தார்.

போலி செய்திகளை ட்வீட் செய்யுங்கள். பிடிபடுங்கள். ட்வீட்டை நீக்குங்கள் என கிண்டலுடன், ”வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இம்ரான் கானை மறைமுகமாக குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்

போலீசாரின் விளக்கம் மற்றும் ரவீஷ் குமாரின் ட்விட்டால் தமது தவறை உணர்ந்து அவற்றை நீக்கிவிட உத்தரவிட்டார் இம்ரான் கான்.