இந்தோனேஷியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
Published : Jan 04, 2020 6:31 AM
இந்தோனேஷியாவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்நாட்டில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தலைநகர் ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெக்காசியில் (BEKASI) மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சாலைகளில் உள்ள சகதிகள் அகற்றப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.