இலங்கையின் தேர்தல் மற்றும் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரை நிகழ்த்திய அவர், மக்களின் இறையாண்மையை காக்கும் வலிமையான சட்டங்கள் தேவை என்றார். நாடாளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை இல்லாவிடில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதால் ஆட்சியில் இருந்தும் உறுதியான முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
பெரும்பான்மை ஆதரவை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனா கட்சி பெற வேண்டும் என்பதே இப்பேச்சின் பின்னணியாக கருதப்படுகிறது. போருக்குப் பிந்தைய சூழலில் தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார்.