​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜன.6ம் தேதி பள்ளிகள் திறப்பு..!

Published : Jan 03, 2020 5:37 PM

ஜன.6ம் தேதி பள்ளிகள் திறப்பு..!

Jan 03, 2020 5:37 PM

வாக்கு எண்ணும் பணிகள் இதுவரை நிறைவடையாததால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விடுத்துள்ள உத்தரவில், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் ஜனவரி 3-ல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டதால், பள்ளிகள் திறப்பு ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கை பணிகள் நீண்ட நேரம் நடைபெற்றுள்ள நிலையில் ஆசிரியர்களால் நாளை பணிக்கு வரமுடியாத சூழல் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜனவரி 6-ம் தேதி, திங்கட்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.