​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை

Published : Jan 03, 2020 5:00 PM

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை

Jan 03, 2020 5:00 PM

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து மலேசிய அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் பெயரை  பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பெயர் பதிவு செய்த நாளில் இருந்து 3  மாதங்களுக்குள் சுற்றுலா வர வேண்டும் என்றும், சுற்றுலா வருகையில் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல அல்லது வேறு நாட்டுக்கு செல்ல பயண டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 26  வரை இம்முறை அமலில் இருக்கும் என்றும், ஒருமுறை பயணமாக வருவோர்,  45 நாள்கள் கழித்த பிறகே மலேசியாவுக்கு மீண்டும் வர முடியும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.