​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி உண்டியல் காணிக்கை 1,161 கோடி ரூபாயை தாண்டி சாதனை

Published : Jan 03, 2020 4:37 PM

திருப்பதி உண்டியல் காணிக்கை 1,161 கோடி ரூபாயை தாண்டி சாதனை

Jan 03, 2020 4:37 PM

உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதியின் கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கை மட்டும் ஆயிரத்து 161 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.

2018 ல் கிடைத்த காணிக்கையை விட இது சுமார் 95 கோடி ரூபாய் அதிகம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது தவிர தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என கிடைத்த காணிக்கைகளின் மதிப்பு பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.  அதே போன்று திருமலையில் உள்ள தங்கும் விடுதிகள் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருவாய் கடந்த ஆண்டு 83 புள்ளி 71 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 12 புள்ளி 5 கோடி என்ற அளவிற்கு லட்டு பிரசாத விற்பனை நடந்துள்ளது. 2018 ஆம் ஆண்டை விட இது ஒரு கோடி அதிகம். திருப்பதி பெருமாளுக்கு முடியை காணிக்கையாக செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கையும் 1 புள்ளி 13 கோடியில் இருந்து 1 புள்ளி 17 கோடியாக உயர்ந்திருக்கிறது.