​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து

Published : Jan 03, 2020 4:26 PM

குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து

Jan 03, 2020 4:26 PM

பாதுகாப்பு காரணங்களால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சபரிமலை வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற 6-ஆம் தேதி சபரிமலை கோவிலுக்கு செல்ல குடியரசுத் தலைவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் வருகை சாத்தியமா என்பது போன்ற தகவல்கள் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இருந்து கேரள அரசுக்கு  கேட்கப்பட்டன.

இது தொடர்பாக, தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால்,குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்று, முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, கேரள மாநில அரசின் அறிக்கை, அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.