குடியுரிமை திருத்த சட்டம்: பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது
Published : Jan 03, 2020 4:19 PM
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என்று அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் கிடையாது, பிறருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் என்றார்.
அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்தாலும், பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என்ற அமித் ஷா, வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர், சிறந்த தலைவரான வீர சவார்க்கருக்கு எதிராக பேசுவதாகவும், இதற்காக அந்தக் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.