வாட்ஸ் அப் செயலியில், புத்தாண்டு தினத்தையொட்டி, 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாரிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதியில் இருந்து புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு வரை 24 மணி நேரத்தில், உலகளவில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் Happy New Year என்ற தகவல் அதிகளவில் பகிரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில், ஒரே நாளில் இத்தனை தகவல்கள் அனுப்பப்பட்டதே இல்லை. ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமான படங்கள் பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தகவல்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளதாகவும், இது, உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு என்றும் கூறப்பட்டுள்ளது.