மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பாடுபட உள்ளதாக, பஞ்சாயத்து தலைவியாக தேர்வான கல்லூரி மாணவி சந்தியா ராணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சாரதியின் மகள் சந்தியா ராணி, கர்நாடகா மாநிலம் மாலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்துக்கு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சந்தியா ராணிதன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதாவை விட 108 ஓட்டுக்கள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தியா ராணி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே தமது முதல் நோக்கம் என்றார்.