​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க 10 ஆண்டுகளுக்கு தடை

Published : Jan 03, 2020 3:48 PM

சீனாவின் யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க 10 ஆண்டுகளுக்கு தடை

Jan 03, 2020 3:48 PM

சீனா அரசு யாங்ட்சீ ஆற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.

அந்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான யாங்ட்சீயில் 1950 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4,20,000 டன் மீன் பிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது 1 லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிபடுவது இல்லை.

மிக அதிகமாக மீன் பிடித்தல், சுற்றுச்சூழல் சீர்கேடு, என பல்வேறு காரணங்களால் யாங்ட்சீ ஆற்றின் தன்மை மாறிப்போனதால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இதையடுத்து ஆற்றில் மீண்டும் உயிர் சூழலை உருவாக்க, அங்கு பத்தாண்டுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் 2,80,000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சீன விவசாய மற்றும் கிராமப்புற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.