ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேரை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாக பற்றி எரியும் தீயால் 13 மில்லியன் ஏக்கரில் காட்டு வளம் எரிந்து நாசமாகி உள்ளது. அத்தோடு, 1000 வீடுகளையும் தீ கபளீகரம் செய்துள்ளது.
மேலும் அந்நாட்டின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தீ பரவி வருவதை அடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களை வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்கும் பணியில் 3500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களின் உயிரை காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள் என்ற இலக்கை மனதில் கொண்டு செயல்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தீயில் பரவுதலை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் மக்களை காக்கும் பணியில் வீர ர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.