​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Published : Jan 03, 2020 3:27 PM

மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Jan 03, 2020 3:27 PM

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாக வில்லை என்றார். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது மக்களின் தீர்ப்பு என்ற அவர், மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.