​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

Published : Jan 03, 2020 1:20 PM

ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

Jan 03, 2020 1:20 PM

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.   

மேலும் 2,300 மருத்துவப் பேராசிரியரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ராஜினாமா முடிவை அறித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள் வரும் 9 ஆம் தேதி முதல் பணிக்கு வரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் 13 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. 

இதில் காந்தி மருத்துவக்கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.