ஈரான் படையின் முக்கிய தளபதியை அமெரிக்கா குண்டு வீசி கொன்றது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் அதன் தூதரகத்திற்கு எதிரான தாக்குதல்களில் ஈரான் ஆதரவு குவட்ஸ் படை மற்றும் ஹிஸ்புல்லா புரட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த 25 பேரை அமெரிக்கா குண்டூ வீசி கொன்றதற்கு பதிலடியாக, பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.
இதை அடுத்து ஈராக்கில் படைபலத்தை அதிகரித்துள்ள அமெரிக்கா, பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், ஈரானின் குவட்ஸ் படையின் தளபதி காஸிம் சுலைமானியை ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசி கொன்றது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தக்க பதில் கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.