இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர் 1000 பேர் கைது - வங்கதேச அரசு
Published : Jan 03, 2020 1:03 PM
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர் 1000 பேர் கைது - வங்கதேச அரசு
Jan 03, 2020 1:03 PM
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த தமது குடிமக்கள் 1000 பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்க தேச அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ஷபீனுல் இஸ்லாம் டாக்காவில் தெரிவித்தார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விவ்வாதித்தனர்.
அதன் அடிப்படையில், முதன்முறையாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று விட்டு திரும்பும் போது கைது செய்யப்பட்டனர்.
அதே போன்று வங்கதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 96 பேரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 62 பேர் ஏற்கனவே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக வங்க தேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.