​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்கம் விலை உயர்வு

Published : Jan 03, 2020 12:56 PM

தங்கம் விலை உயர்வு

Jan 03, 2020 12:56 PM

தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று சவரன் 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 456 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 57 ரூபாய் விலை உயர்ந்து 3793 ரூபாயாக உள்ளது.

அதேபோன்று வெள்ளி விலை நேற்று கிலோ 50 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 700 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து 51 ரூபாய் 10 காசுகளாக உள்ளது.