2ஆவது முறையாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின்
Published : Jan 03, 2020 7:15 AM
2ஆவது முறையாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின்
Jan 03, 2020 7:15 AM
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முடிவுகளை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தியிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நியாயமான முறையில் நடத்தி முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேற்று மாலை சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் அதிகாரிகளின் துணையுடன் திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக முயல்வதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்படுவது தொடர்பாக புகார் அளித்தார்.அப்போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மு.க.ஸ்டாலினுடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுகிறதா என்பதைப் பொருத்து திமுக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.