​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி செய்திகளை தடுக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை

Published : Jan 02, 2020 3:10 PM

போலி செய்திகளை தடுக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை

Jan 02, 2020 3:10 PM

போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடங்கியுள்ளது.

போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள
“See Why” எனும் அம்சமும்,தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ள “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.