மத்திய அரசின் புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்கப்படுத்தும் வாசகங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பிரதமர் மோடி, சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது கடற்கரையில் உலாவும் காட்சி மற்றும் அவர் வேட்டி சட்டையில் இருக்கும் முழு படக்காட்சி ஆகியவையும் காலண்டரில் இடம்பெற்றிருக்கிறது.