காட்டுத் தீயின் வீரியத்தால் ஆஸ்திரேலியாவின் தலைநகரே திண்டாடும் நிலை உருவாகி உள்ளது.
அந்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் கான்பெராவை சுற்றிலும் உள்ள காடுகளில் தீ பரவி உள்ளதால், நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. தபால் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிட்னி நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாகாண நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளனர்.