​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் வாழ்த்து

Published : Jan 02, 2020 2:31 PM

தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் வாழ்த்து

Jan 02, 2020 2:31 PM

மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு அனைத்து துறை முதன்மை செயலாளர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், சட்டம் ஒழுங்கு, மக்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தமிழகம் முதலிடத்தை பெற்றது.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், சிறந்த நிர்வாகத்திற்காக உதவிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.