அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கலிபோர்னியா பகுதியில் சான்டா குரூஸ் போனி டூன் கடற்பகுதியில் பாறையில் ஒருவர் கடலலையை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த இளைஞரை தூக்கி வீசியது.
பின்னர் பின்னால் சென்ற அலையின் தாக்கத்தில் அந்த இளைஞரும் இழுத்துச் செல்லப்பட்டு கடலுக்குள் விழுந்தார். இந்நிலையில் இளைஞர் கடலுக்குள் விழுந்த செய்தியறிந்த கடலோர காவல் படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.