​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தாண்டில் குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்

Published : Jan 02, 2020 9:41 AM

புத்தாண்டில் குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்

Jan 02, 2020 9:41 AM

புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளதாகவும், கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன என்றும் யுனிசெப் கூறியுள்ளது.

இதில் இந்தியாவில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 385 குழந்தைகளும், சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும் பிறந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.