​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

Published : Jan 02, 2020 9:22 AM

நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

Jan 02, 2020 9:22 AM

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தைவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்த நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்.

அவருடைய ஆசிரமம் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமான நில ஆக்ரமிப்பில் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடிக்கவும் அதன் சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன் இடிப்பதற்கான பணிகள் தொடங்கின. நேற்று அந்த ஆசிரமம் முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.