மெக்ஸிகோவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்தனர்.
ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கால்பந்து விளையாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது சில கைதிகள் துப்பாக்கியாலும் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மோதலை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்தனர். அதற்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 16 கைதிகள் உயிரிழந்ததாக மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்தும், சிறைக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எப்படி கிடைத்தன என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.