ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு
Published : Jan 02, 2020 8:33 AM
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
இந்த குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது. இந்நிலையில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குவைத்தில் நிலை கொண்டுள்ள 750 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் 4 ஆயிரம் வீரர்களை அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவில் போராட்டம் நடத்தக் குவிந்ததிருந்த மக்கள் மீது அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.