​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Centre vs State: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published : Jan 02, 2020 8:25 AM

Centre vs State: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Jan 02, 2020 8:25 AM

குடியுரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கேரள சட்டமன்றம் உட்பட எந்த ஒரு மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதனை மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

இது சட்டப்படி செல்லாது, மத்திய சட்டத்துறை அமைச்சர் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். அனைத்து மாநில அரசுகளும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் மதிக்காதவர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலங்களுக்கு என்று சில தனித்துவம் மிக்க அதிகாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.