சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்
Published : Jan 02, 2020 7:20 AM
சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.
வர்த்தக போர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளும் அண்மையில் பேச்சு நடத்தின. இதன்பின்னர் பிரச்னைக்கு தீர்வு காண முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு எடுத்தன.
இதன்படி வெள்ளை மாளிகையில் வரும் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சீனாவுடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட இருப்பதாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், 2ஆவது கட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த சீனாவுக்கு தாம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.