சீரியல் கில்லர் ஜோலி ஜோசப் வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள்
Published : Jan 02, 2020 7:09 AM
கேரளாவில் தமது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 5 பேரை சயனைடு விஷம் வைத்து கொலை செய்த ஜோலி ஜோசப் வழக்கில் சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாமரசேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2016 வரை ஒவ்வொருவராக திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்ற விவரம் அதில் வெளியாகியுள்ளது. வட கேரளத்தில் பொன்னமாடம் குடும்பத்தினரை 14 ஆண்டுகளில் கொலை செய்த வழக்கில் ஜோலிக்கு உடந்தையாக இருந்ததாக கடந்த அக்டோபர் மாதத்தில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலி ஜோசப்பின் இரண்டு குழந்தைகள் உட்பட 246 சாட்சிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜோலியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சயனைடு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், சிக்கன் குழம்புடன் சயனைடை கலந்து ஜோலி தமது கணவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், குற்றப்பத்திரிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறு.
கணவர் உயிருக்குப் போராடிய போது தண்ணீர் தந்த ஜோலி அந்த தண்ணீரிலும் சயனைடை கலந்துக்கொடுத்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.