புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து 182 புள்ளிகளில் நிறைவுற்றது.
உள்கட்டமைப்பு துறையில் 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது சந்தை ஏற்றத்துடன் நிறைவடைய காரணமாக இருந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதானி போர்ட்ஸ், பவர் கிரிட்ட உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து, 71 ரூபாய் 36 காசுகளாக இருந்தது