பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய பா.ஜ.க.நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், இல. கணேசன் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால், பா.ஜ.க.வினரை போலீசார் வேனில் ஏற்றி மைலாப்பூர் சமுதாய நலகூடத்துக்கு வேனில் கொண்டு சென்றனர்.
இதேபோல் மைலாப்பூர் சிட்டி சென்டர் அருகில் சாலை மறியலில் ஈடுபடமுயன்ற ப.ஜ.க. மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.