​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலை. அறிவிப்பாணைக்கு தடை

Published : Jan 01, 2020 7:06 PM

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலை. அறிவிப்பாணைக்கு தடை

Jan 01, 2020 7:06 PM

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே, 518 தற்காலிக ஆசிரியர்கள் உள்ள நிலையில் மீண்டும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான நிரந்தர ஆசிரியர்களே பணியாற்றுவதாக விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.