முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்துஜா குழுமம் வாங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஜெட் ஏர்வேஸ் சுமார் 8,230 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது.
இதர நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார் 6,400 கோடி அளிக்க வேண்டியுள்ளது. கடன் மற்றும் சக விமான நிறுவனங்களின் போட்டியால், அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லாமல் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி முடங்கியது.
புதிய முதலீட்டாளர்களை கண்டுபிடித்து ஜெட் ஏர்வேசுக்கு உயிரூட்ட வங்கிகள் முயற்சித்து வரும் நிலையில் இந்துஜா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்துஜா குழுமத்துடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டிய எத்திஹாத் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் திவாலாகியதை அறிந்து பின்வாங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.